திருச்சி ஶ்ரீரங்கம் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 26வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் 2 தங்கப்பதக்கங்கள், 24 பல்கலைகழக தர வரிசை பெற்றவர்கள் உட்பட ஆயிரத்து 9 மாணவ, மாணவிகளுக்கு ஆர்கே ஸ்வாமி லிமிடெட் நிர்வாகக்குழு தலைவர் சீனிவாசன் கே ஸ்வாமி பட்டம் வழங்கி பேசியது:
ஆன்மீகத்துடன் இணைந்து கல்வி கற்பது சிறப்பாகும். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு சவால் விடும்வகையில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. 2046 ம் ஆண்டில் இந்தியா அனைத்து துறைகளிலும் முழு வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். செய்யும் தவறுகளில் இருந்து அனுபவம் பெற்று அதனை திருத்திக் கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நேர்மை, அர்பணிப்பு, முழு ஈடுபாட்டுடன் எந்த செயல்களில் ஈடுபட்டாலும் விரைவில் உயர்நிலை அடையலாம். கல்வி பயின்று பணியில் சேருபவர்கள் பணத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் நிறுவனத்தின் பின்னணியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். கல்லுாரி தாளாளர், செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பிச்சைமணி பட்டமளிப்பு அறிக்கை படித்தார். நிகழ்ச்சியில் மூத்த துணை முதல்வர் ஜோதி, துணை முதல்வர்கள் கிருஷ்ணன், உபேந்திரன் உட்படபலர் கலந்து கொண்டனர்.
0 Comments