NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி மாஃபியாக்களால் நடைபெறும் கனிமவள கொள்ளையை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்தும், படுகொலை செய்தவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க கோரியும், உயிரிழந்த ஜகுபர் அலி  குடும்பத்தாருக்கு தமிழக அரசு 50 லட்சம் நஷ்டஈடு வழங்க கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், திருச்சி பாலக்கரை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். 


மாவட்ட பொருளாளர் பிச்சைக்கனி முன்னிலை வகித்தார்.  தமிழ் மாநில பொதுச் செயலாளர் அபுபக்கர் சித்திக் கலந்து  கொண்டு, சமூக ஆர்வலர் ஜகபர்அலிக்கு நீதி வேண்டி கண்டன  உரையாற்றினார்.


முன்னதாக மாவட்ட பொது செயலாளர் முகமது சித்திக் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வர்த்தகர் அணி மாவட்ட பொருளாளர் இப்ராஹிம், SDTU தொழிற்சங்க ஊடக அணி நிர்வாகி சலீம், மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ், 


மாவட்ட செயலாளர் மதர் ஜமால் முகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிராஜ், கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா, மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா, திருவெறும்பூர் தொகுதி தலைவர் ஷேக் முகமது, ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசிர், மணப்பாறை தொகுதி தலைவர் முகமது கோயா, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, 

SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா, செயலாளர் சர்க்கரை மீரான், வர்த்தகர் அணி தலைவர் பக்ருதீன், சுற்றுச் சூழல் அணி தலைவர்  ரஹ்மத்துல்லா, தொண்டரணி மாவட்ட தலைவர் முகமது ஆரிப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் உபைதுர் ரஹ்மான், மண்டல பொறுப்பாளர் ரியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இறுதியாக மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் (பாபு)  நன்றியுரையாற்றினார்.

Post a Comment

0 Comments