NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வருவாய்த்துறை அலுவலர்களின் அதீத பணி நெருக்கடியை கலைத்திட கோரியும் நியாயமான வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கும் வட்ட மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர் அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பொன் மாடசாமி முன்னிலை வைத்தார்


இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையாக‌: பி எம் எஸ் மென்பொருளில் உள்ள குறைபாடுகளை கலைத்திட வேண்டும்,நகரப் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் பட்டா வழங்கும் திட்டம் புதிய குடும்ப அட்டை வழங்கும் திட்டம் ஆகியவற்றிற்கு குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கிட வேண்டும்,இளநிலை உதவியாளர் தட்டச்சர் இடை மேலாளர் ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்து உதவியாளர் பட்டியல் வெளியிட சி.ஆர்.ஏ தெளிவான சுற்றறிக்கை வழங்கிட வேண்டும். 




பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும்,மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்,முழு பலன் பட்டா மற்றும் மாறுதல் செய்திடும் அதிகாரத்தை தலைமை இடத்து துணை வட்டாட்சியருக்கு பிரித்து வழங்கியதை உடனடியாக கைவிட்டு பழைய முறையை தொடங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் அனைத்து வட்ட கிளை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,முடிவில் மாவட்ட பொருளாளர் ராமலட்சுமி நன்றி கூறினார்

Post a Comment

0 Comments