NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மெதடிஸ்ட் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மெதடிஸ்ட் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

 சிஎஸ்ஐ மெதடிஸ்ட் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு திருச்சி திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மெத டிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவி கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


1966-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை இங்கு படித்த முன்னாள் மாணவிகள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் இதில் பங்கேற்றனர்.பேராயர் சந்திரசேகரன் தலைமை வகித்து வாழ்த்தினார். பள்ளித் தாளாளர் வனஜா சலோமி, தலைமையாசிரியை வசந்தி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


நண்பர்களுடன் பசுமையான பள்ளிக் கால நிகழ்வுகளை மகிழ்ச்சி, உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி யைச் சுற்றிப் பார்த்து, தாங்கள் அமர்ந்திருந்த வகுப்புகளுக்குச்சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



நண்பர்கள் சிலர், ஒருவருக்கொருவர் நினைவுப் பரிசுகள் வழங்கிக் கொண்டனர். மீண்டும் திரும்ப முடியாத மாணவப் பருவத்தை, தங்களது மலரும் நினைவுகள் மூலம் புதுப் பித்தபடி கண்ணீருடன் பள்ளி யில் இருந்து விடை பெற்றனர்.

இது குறித்து அவர்கள் கூறு கையில், பல ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் படித்த பள்ளிக்கு மீண்டும் வந்து, சக நண்பர்கள், ஆசிரியர்களைப் பார்த் ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. பல்வேறு நினைவு களை நண்பர்களுடன் பகிந்து கொண்டது, மாணவப் பருவத் துக்குத் திரும்பியதுபோல இருந்தது. பலரும் தொடர்பில் இல்லாமல் போன நிலையில், இந்தச் சந்திப்பு நண்பர்கள் மீண்டும் இணைய உதவியாக இருந்தது என்றனர்.

Post a Comment

0 Comments