NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** புதுவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்A.M.H நாஜிம் தாயார் மறைவு - முதல்வர் ரங்கசாமி நேரில் சென்று அஞ்சலி

புதுவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்A.M.H நாஜிம் தாயார் மறைவு - முதல்வர் ரங்கசாமி நேரில் சென்று அஞ்சலி

பாண்டிச்சேரி தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.M.H. நாஜிம் அவர்களின் தாயார் ஹாஜியா முத்துலாத்தா ( எ) நபிசா உம்மாள் அவர்கள் இன்று (27.02.2025) இயற்கை எய்தினார்கள்.  அவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.  


மேலும் சட்டமன்ற உறுப்பினர்  A. M.H. நாஜிம் அவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

மேலும்,  புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம், புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜே சரவணன்,  துணை சபாநாயகர் ராஜவேல்,  புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி காந்தன்,  புதுச்சேரி சட்டப்பேரவை அரசு கொறடா  A.K.D ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்து அஞ்சலி செலுத்தினர்கள். 

மேலும் இன்று காலை முதலே  அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்கள்.


நிருபர் - முகமது ஆரிப்

Post a Comment

0 Comments