// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சிராப்பள்ளி மாநில நெடுஞ்சாலையான சென்னை-திருச்சி-திண்டுக்கல்  சாலையில் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி முதல் திருச்சி இரயில்வே சந்திப்பு திண்டுக்கல் பிரியாணி கடை வரை உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அப்புறப்படுத்த கோரி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 


ஆனால் ஆக்கிரமிப்பு கடைகளில் அகற்றப்படாததால் இன்று காலை நெடுஞ்சாலைத்துறை சார்பில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி தலைமையில் உதவி பொறியாளர் நடராஜன் மற்றும் ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு மாநில நெடுஞ்சாலைத்துறை சாலையை ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்களை அகற்றினர். 




இந்த நிலையில் ஜங்ஷன் பகுதியில் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது. முன்னதாக அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments