NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முஸ்லிம் மாணவர் பேரவையின் சார்பில் சமூக நல்லிணக்க மிலாது விழா மாநில பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா மாநிலத் தலைவர் அன்சர்அலி தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் காதர் மைதீன் கலந்துகொண்டு நிறைவுறையாற்றினார்.முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்


டெல்லியில் தேசிய பொதுக்குழு நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.பொதுக்குழுவில் நான்கு ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் போர்வையில் அந்த மாநிலத்தில் உள்ள 40%மேற்பட்ட மலைசாதி மக்களுக்கு பொருந்தாத மற்றவருக்கு மட்டும் தான் சட்டம் எனக் கூறி விட்டு நிறைவேற்றி ஜனவரி முதல் அமுல்படுத்தி உள்ளனர்.அவர்கள் நிறைவேற்றிய சட்டமும், நடைமுறை படுத்தப்பட்ட சட்டம் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.அது பொது சிவில் சட்டம் அல்ல அந்த பெயரில் இந்து மதத்தில் அடிப்படையிலான சட்டத்தை திணிக்கிற முயற்சி ஆகும் இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


எல்லா மதத்தை ஒன்று படுத்துகிற சட்டம் என்பதை யாராலும் ஏற்க முடியாத ஒன்று, சிந்திக்க முடியாத ஒன்று.அம்மாநிலத்தின் முதல்வர் அதனை நடைமுறைப்படுத்த உள்ளார். மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு மீது மத்திய அரசு மீது வழக்கு தொடுத்துள்ளோம்.திருகுர்ஆனில் உள்ள சட்டத்தையே மாற்ற முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.திருக்குறளில் உள்ள உறவு முறைகளை மாற்றி சட்டத்தை  இயற்றியுள்ளனர். அதை மீறினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை எனவும், அபராதம்  விதிக்கப்படும் என ஒரு காட்டு மிராண்டித்தனமான சட்டத்தை இயற்றி இருக்கின்றனர்.இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்.



நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த  சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். 44 சட்டத்தை திருத்தத்தைக் கொண்டு வந்து புதிய சட்டத்தை உருவாக்க  மத்திய அரசு முயற்சி செய்கிறது. இது தவறானது இது திருத்தச் சட்டம் அல்ல வக்புவை ஒழிக்கக்கூடிய சட்டமாகும். 

இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் திமுக. கம்யூனிஸ்ட். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்ததால் அதை நிறைவேற்ற முடியாமல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. 

நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் இந்தியா முழுவதும் இந்த சட்ட திருத்தத்தை ஏற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா கருத்துக்களில் 95சதவீத கருத்துக்கள் இந்த  சட்டம் சரியான சட்டம் அல்ல என கருத்து தெரிவித்துள்ளனர்

மீண்டும் அதே சட்டத்தை முன்மொழியக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாங்கள் எதிர்த்து சொன்ன எந்த கருத்துக்களும் இடம் பெறாமல் அந்த சட்டத்தை மீண்டும் சபாநாயகரிடம் கொடுத்து அதனை கொண்டு வரக்கூடிய முயற்சி நடந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் செல்வோம்.

ராணுவ சொத்துக்களை, ரயில்வே சொத்துக்கள் எப்படி அரசு சொத்துக்களாக உள்ளது அதுபோல வக்பு சொத்துக்களை அரசு சொத்துக்களாக மாற்ற முயற்சி நடக்கிறது. 

வக்பு சட்டம் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அடிப்படையான சட்டம், நாடாளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் வைத்து மாற்றம் செய்ய முடியாது.தமிழகத்தில் கல்விக்கான நிதி வர முடியாது என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு தமிழகத்தின் வளர்ச்சியை முன்னேற்றத்தையும் கெடுப்பதற்காக வேண்டி மத்திய அரசு பல்வேறு குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றாகத்தான் இதையும் கருதுகிறோம். இரு மொழி கொள்கை இந்த மண்ணில் வேரூன்றி தத்துவம்.

திருப்பரங்குன்றம் தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அண்ணாமலை பன்றி வெட்டப்படும் என்று கூறியுள்ளார் என்ற கேள்விக்கு இது குறித்து நீதிமன்றம் சென்றுள்ளனர்.திருப்பரங்குன்றத்தில் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் கிடையாது ஆண்டாண்டு காலமாக பாரம்பரியமான வழிபாட்டு முறைகள் நடைபெற்ற வருகிறது பகுதியை சேர்ந்த ஆறு சமுதாய மக்கள்  மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ள.ஆனால் சிலர் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது, மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.அனைத்து மத நல்லிணக்க அமைப்பு குழு அமைத்து மாவட்ட ஆன்மீக பெருமக்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு நல்லிணக்க பிரச்சாரத்தை தொடர்வதற்கு முடிவெடுத்துள்ளோம். இந்தியாவில் 7 சதவீத இஸ்லாமியர் உள்ளனர்.5சதவித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்சமஸ்கிருதத்தை மீண்டும் உயிர்பிக்கும் நிலையை கிரிமினல் சட்டங்களை மூன்று சமஸ்கிருதத்தில் ஏற்படுத்தி உள்ளனர். சமஸ்கிருதத்தை உயிர் பெற வைக்கும் என்ற முயற்சி இந்தி என்ற போர்வையில் செயல்படுத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.


Post a Comment

0 Comments