NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி காந்தி மார்கெட்டில் மொத்த வியாபாரிகள் சில்லறை விற்பனையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என காந்தி மார்கெட் சில்லறை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

திருச்சி காந்தி மார்கெட்டில் மொத்த வியாபாரிகள் சில்லறை விற்பனையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என காந்தி மார்கெட் சில்லறை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

திருச்சி காந்தி மார்கெட்டில் மொத்த வியாபாரிகள் சில்லறை விற்பனையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என காந்தி மார்கெட் சில்லறை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருச்சி மாவட்டத்தின் முக்கிய சந்தையாக காந்தி சந்தை விளங்கி வருகிறது. திருச்சி மட்டுமல்லாது திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொது மக்களும் வியாபாரிகளும் தங்களுக்கு தேவையான காய், கனிகள், பூ, பழம், மீன் உள்ளிட்டவற்றை வாங்கி செல்வார்கள்.


அங்கு மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு மொத்த வியாபாரித்தில் ஈடுபடும் வியாபாரிகள் கொரோனா காலத்திற்கு பின் சில்லறை விற்பனையிலும் ஈடுபட்டு வருவதாகவும் அதன் காரணமாக சில்லறை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அதனை முறைப்படுத்த வேண்டும், மொத்த வியாபாரிகள் சில்லறை விற்பனையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும், அதற்கு மொத்த வியாபாரிகளையும் சில்லறை வியாபாரிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் சங்கத்தினர் காந்தி மார்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர் அதன் தலைவர் கமலக்கண்ணன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமலக்கண்ணன் மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 1ஆம் தேதி காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் தங்களின் கடைகளில் முன்னாள் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்போம் என தெரிவித்தார்.


Post a Comment

0 Comments