NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** "BONITAA"வின் 8 வது கிளை திருச்சியில் புது பொலிவுடன் திறப்பு

"BONITAA"வின் 8 வது கிளை திருச்சியில் புது பொலிவுடன் திறப்பு

முகப்பிரச்சினை  மற்றும் தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு எளிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கோயம்புத்தூரை  தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் BONITAA நிறுவனத்தின் 8 வது கிளை புது பொலிவுடன் கரூர் பைபாஸ் அண்ணாமலை நகரில் திறப்பு விழா நடைபெற்றது 


இந்த திறப்பு விழாவில் மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி‌ திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.


இந்த BONITAA நிறுவனத்தில்‌ முகப்பிரச்சினை  மற்றும் தலைமுடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகளைக் கொண்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மேலும் பக்க விளைவுகள் இல்லாத எளிய முறையில் மிக குறைந்த செலவில் இங்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக இந்த நிறுவனத்தின் இயக்குனர் கவிதா கதிர்வேல்.அமுதா சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த திறப்பு விழாவில் தலைமை நிர்வாக அதிகாரி சந்திரசேகரன்,மற்றும் கிளையின் பொறுப்பாளர்கள் பிரேம்குமார் சிவராமன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments