திருச்சி மாவட்ட பழைய ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆய்வு செய்வது வழக்கம்.அந்த வகையில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர், தனி வட்டாட்சியர் மற்றும் தி.மு.க, அதிமுக, காங்கிரஸ் சார்பில் பிரியங்கா படேல்,தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புல்லட் லாரன்ஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் , ஆம் ஆத்மி வழக்கறிஞர் இளங்கோ, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அதிகாரிகள் உடன் இருந்தனர்
இந்த ஆய்வு நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்றது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது..
0 Comments