// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தமிழ்நாடு தேவர் பேரவை மாநில பொதுச்செயலாளராக வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் நியமனம்

தமிழ்நாடு தேவர் பேரவை மாநில பொதுச்செயலாளராக வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் நியமனம்

 தமிழ்நாடு தேவர் பேரவை மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 


அதன்படி பேரவையின் மாநில பொதுச்செயலாளராக வழக்கறிஞர் முத்துகிருஷ்ணனை மாநில தலைவர் பசும்பொன் முத்தையா அறிவித்தார்.  அதனை தொடர்ந்து அவர் முத்தையா தேவர் மற்றும் மாநில நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார். மேலும் அவருக்கு மாநில நிர்வாகிகள் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் உறவினர்கள் , நண்பர்கள், வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் சீமானேந்தல் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்

Post a Comment

0 Comments