NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி இறகுகள் தொண்டு நிறுவன முதியோர் இல்லத்தின் மருத்துவர் காயத்ரி சேகர் நியமனம்

திருச்சி இறகுகள் தொண்டு நிறுவன முதியோர் இல்லத்தின் மருத்துவர் காயத்ரி சேகர் நியமனம்

 திருச்சி ஶ்ரீரங்கத்தில் இறகுகள் தொண்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும்  இறகுகள் முதியோர்  இல்லத்தில்  முதியவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சிறப்பான முறையில் தனது சேவையை செய்து கொண்டு இருந்தாலும்  "மருத்துவம் என்பது முதியவர்களுக்கு மிகவும் முக்கியமானது"

இவற்றினை கருத்தில் கொண்டு இறகுகள் முதியோர் இல்லத்தில் மெடிக்கல் அட்மினிஸ்ட்ரேட்டர் மற்றும் இறகுகள் முதியோர் இல்லத்தின் 24 மணி நேர சேவை மருத்துவராக டாக்டர் காயத்ரி  சேகர் MBBS,MD  அவர்களை நியமனம் செய்துள்ளனர்..  

இவற்றினை இறகுகள் அகாடமி நிறுவனர் மரியா மெர்சி மற்றும் இறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜே.ராபின்  ஆகியோரைக் கொண்டு இந்த நிகழ்வு நடைபெற்றது.



அதுமட்டுமின்றி முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை  செய்து அவர்களுக்கான மருந்துகள் வழங்கப்பட்டது..

இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் முதியோர் இல்லத்திற்கு முக்கிய தேவை மருத்துவமும் மருத்துவமும் சார்ந்த சேவைகளுமே  என்பதை கருத்தில் கொண்டு இந்த நிகழ்வு நடைபெற்றது

Post a Comment

0 Comments