NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி அரசு மருத்துவமனையில் 70 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்ற தீ தடுப்பு ஒத்திகை நிகழ்வு

திருச்சி அரசு மருத்துவமனையில் 70 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்ற தீ தடுப்பு ஒத்திகை நிகழ்வு

திருச்சி அரசு மருத்துவமனையில் 70 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்ற தீ தடுப்பு ஒத்திகை நிகழ்வு திருச்சி அரசு மருத்துவமனையில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தீ விபத்து தடுப்பு மற்றும் மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்வு மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வினோத் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது.

மூன்று தீயணைப்பு வாகனம் மற்றும் அதிக உயரம் செல்லும் ஸ்கை லிப்ட் வாகனம், 70 தீயணைப்பு வீரர்கள், பங்கேற்று அரசு மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கையாள்வது எப்படி, சமையல் செய்யும் என்னை மற்றும், சிலிண்டர் தீ விபத்தை எவ்வாறு தடுப்பது மற்றும் தீக்காயங்களை எவ்வாறு கையாளுவது உள்ளிட்டவைகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டது.

 மேலும்,திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள உயர் மாடி கட்டிடத்தில் மீட்பு நிகழ்வை ஸ்கை லிப்ட் வாகனத்தைக் கொண்டு மீட்பு பணி ஒத்திகை செய்தனர்இந்த நிகழ்வின் போது திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் குமரவேல், மற்றும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments