NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக ஹிந்து தர்மத்தின்  இரு சமயத்தின்( சைவம்,வைணவம்) சின்னங்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி  திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சுதாகர் திலக் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோட்டச் செயலாளர் முருகேசன், கோட்ட பொறுப்பாளர்கள் ராஜகோபால் சர்மா ஜி,  வாளடி சங்கர் ஜி, பிரபாவதி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.


முன்னதாக மாவட்ட செயலாளர் சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்  மாநில பசு பாதுகாப்பு பொறுப்பாளர் சசிகுமார், மாநில பஜரங்தள் இணை பொறுப்பாளர் ஆனந்த் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார். 

வரகனேரி மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், அழகு யுவராஜ், பரமசிவம், கார்த்தி, ராஜேந்திரன், செந்தில்நாதன், கார்த்திகேயன், ரவிச்சந்திரன், தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Post a Comment

0 Comments