NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** வக்பு வாரிய சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம் உத்தரவை வரவேற்று திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் இஸ்லாமியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்:-

வக்பு வாரிய சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம் உத்தரவை வரவேற்று திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் இஸ்லாமியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்:-

 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- வக்பு திருத்த சட்டப்படி எந்த புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்றும் ஏற்கனவே பதியப்பட்ட வக்பு சொத்துக்கள் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது..

இஸ்லாமியர்களின் உண்மையான வக்பு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டுவந்த புதிய சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது இஸ்லாமியர்களின் உரிமைக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன் தமிழக வெற்றி கழகம் துணை நிற்கும் என தீர்க்கமாக தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.



வக்பு வாரிய சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்க்கும் விதமாக தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் சந்திரா அறிவுறுத்தலின்படி திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


இந்த நிகழ்வில் இணை செயலாளர் சிவா, துணை செயலாளர் சாந்த ஷீலா, செயற்குழு உறுப்பினர்கள் ஐஸ்வர்யா, கல்பனா, சங்கீதா, முத்து, டேனியல் மற்றும் தென்னூர் பகுதி செயலாளர் அப்துல்லா, இணை செயலாளர் விஜய் கண்ணன், பொருளாளர் சேக், துணைச் செயலாளர் பைரோஸ், செயற்குழு உறுப்பினர் நிசார், மற்றும் 27 வது வார்டு வட்ட செயலாளர் சீனிவாசன்,  28 வது வார்டு பொருளாளர் அப்துல்லா, 29 வது வார்டு வட்ட செயலாளர் ரகுமான், இணை செயலாளர் கலந்தர் உள்ளிட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments