NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** சித்தன்னவாசல், கொடும்பாளூர் ஒரு நாள் ப்ரீ

சித்தன்னவாசல், கொடும்பாளூர் ஒரு நாள் ப்ரீ

உலக பாரம்பரிய  தினத்தை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ஒன்றிய தொல்லியல் துறைக்கு சொந்தமான சுற்றுலா தலங்கள் கொடும்பாளூர் மூவர் கோயில், சித்தன்னவாசல் குடைவரை கோயில் உள்ளிட்ட புராதன சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூர் மூவர் கோயில், சித்தன்னவாசல் ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலா தலங்களாகும்.அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களுக்கு சவால் விடும் அளவிற்கு பழங்கால கலர் ஓவியங்கள், சமணர் படுக்கைகள், கற்கால சிலைகள் என பல்வேறு வரலாற்று சிறப்புகளை கண் முன்னிறுத்தும் சித்தன்னவாசல், அதேபோல் சோழர் காலத்தில் கொடும்பாளூரை ஆண்ட வேளிர் குல அரசன் பூதி விக்கிரமகேசரி என்பவரால் கட்டப்பட்ட கொடும்பாளூர் மூவர் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் ஆகும். இவைகள் இரண்டும் மத்திய அரசின் தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில் (ஏப்ரல் 18) சர்வதேச பாரம்பரிய தினத்தையொட்டி ஒரு நாள் நுழைவு கட்டணமின்றி சுற்றுலா பயணிகள், பார்வையாளர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று தொல்லியல் துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டு  நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததை தொடர்ந்து பார்வையாளர்கள் கட்டணமின்றி புராதான சின்னங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments