// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** திருச்சி மாநகராட்சி மண்டலம் - 5 அலுவலகத்தில் கலைஞர் உருவப்படத்திற்கு கவுன்சிலர்கள் மரியாதை மேயர் அன்பழகன் தலைமையில் பங்கேற்பு

திருச்சி மாநகராட்சி மண்டலம் - 5 அலுவலகத்தில் கலைஞர் உருவப்படத்திற்கு கவுன்சிலர்கள் மரியாதை மேயர் அன்பழகன் தலைமையில் பங்கேற்பு

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 - வது பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர்கள் கோ -அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்விற்கு மண்டலம் 5-ன் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமை தாங்கினார்.மண்டலம் 4 -ன் தலைவர் துர்காதேவி முன்னிலை வகித்தார்.


இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு, கலைஞர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.


இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், கமால் முஸ்தபா, விஜயா ஜெயராஜ், கலைச்செல்வி ஜெகநாதன்,பங்கஜம் மதிவாணன்,நாகலட்சுமி நம்பி,விஜயலட்சுமி சரவணன்,சோபியா விமலா ராணி,கலைமணி சண்முகம் ,சுபா ராஜகோபால்,கலைச்செல்வி கருப்பையா,மஞ்சுளா தேவி பாலசுப்பிரமணியன்,முத்துக்குமார், சுரேஷ்,திமுக நிர்வாகிகள் துரைராஜ், தில்லை நகர் கண்ணன்,புத்தூர் தர்மராஜ், தொ.மு .ச குணசேகரன்,பொன்ராஜ், எம்.ஏ.எஸ்.மணி,பாலமுருகன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments