// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் 51ஆவது பிறந்தநாள்- 100-க்கும் மேற்பட்டோர் இரத்த தானம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் 51ஆவது பிறந்தநாள்- 100-க்கும் மேற்பட்டோர் இரத்த தானம்

 தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் 51ஆவது பிறந்தநாள் விழா -திருச்சி அரசு மருத்துவமனையில் 100 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு, அக்கட்சியின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தவெக திருச்சி தெற்கு  மாவட்டம் சார்பில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. 


தெற்கு மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர். 


இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் அணி சென்னை மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் ஆதித்ய சோழன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்ய சோழன் :-இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜயின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். திருச்சி மாவட்டத்தில் இன்று 51 நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். அதன் ஒருபகுதியாக திருச்சி அரசு மருத்துவமனையில்  ரத்ததானம் வழங்கியுள்ளோம். 27வது ஆண்டாக நடைபெறும் இந்த ரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கியுள்ளோம் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments