// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** தவெக தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம் - அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை

தவெக தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம் - அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை

த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுச்செயலாளர் ஆனந்து  அவர்களின் ஆலோசனையில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

த.வெ.க திருச்சி மாநகர்  மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி புத்தூர் பகுதி சார்பாக நிர்வாகிகள் விஜய், அன்பு, ஹரி, ராமச்சந்திரன், ரேவதி, கார்த்தி, வெங்கடேஷ், பார்த்திபன், ரவி, குருமூர்த்தி, நந்தகுமார், 








கோவிந்தராஜ், பாலாஜி, கிருஷ்ணவேணி, பிரியா இவர்களின் ஏற்பாட்டில் புத்தூர் மந்தையில் 24,25,26 வது வார்டுக்குட்பட்ட பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த 31 மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை  வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments