NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** இலவச வீடு மனை பட்டா வழங்கிய கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ

இலவச வீடு மனை பட்டா வழங்கிய கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கான பட்டா  வழங்கும் நிகழ்ச்சி ஏர்போர்ட் பகுதி வயர்லெஸ் ரோட்டில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 61 வது வார்டு காமராஜர் நகர், குளவாய்பட்டி,வடக்கு தெரு,TSM அவென்யூ ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் 240 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் அவர்கள் வழங்கினார்


இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன்,மண்டலம்_2கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா,மற்றும் பகுதி செயலாளர்  மணிவேல், மாமன்ற உறுப்பினர் ஜாஃபர் அலி,வட்டச் செயலாளர் சாமுவேல் ராஜா, திருச்சி கிழக்கு வட்டாட்சியர் சக்திவேல் முருகன் மற்றும் பொதுமக்கள்  கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments