ராகுல் காந்தி எம்பியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் சேவாதளம் சார்பாக மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது..அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி எம்பி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் சேவாதளம் சார்பாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ருதி மகாலில் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று நடைபெற்றது.
இவ்விழாவில் மாநகர் மாவட்ட மகளிரணி தலைவி ஆசியாபீ வரவேற்புரை ஆற்றிட, ஒருங்கிணைந்த திருச்சி காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைவர் லெஷ்மி தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட காங்கிரஸ் சேவா தளம் சார்பாக ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி பெண் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதளம் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் குங்ஃபூ விஜயன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் கலை மற்றும் முன்னாள் மேயர் சுஜாதா, முன்னாள் புறநகர் மாவட்ட தலைவர் செல்லப்பன், நிர்வாகிகள் செந்தில்குமார், அப்துல் குத்தூஸ், தேன்தமிழ், மேரிஆஷா ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் இறுதியாக திருவரம்பூர் சேவாதளம் வட்டாரத் தலைவர் ஸ்டாலின் மனோகர் நன்றியுரை ஆற்றினார்.
0 Comments