NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** இஸ்லாமிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் பற்றிய தமிழக முதல்வரின் பேச்சுக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் வரவேற்பு!

இஸ்லாமிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் பற்றிய தமிழக முதல்வரின் பேச்சுக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் வரவேற்பு!

 இஸ்லாமிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் பற்றிய  தமிழக முதல்வரின் பேச்சுக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறுகையில்...அண்மையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இஸ்லாமிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் பற்றியும் அதைப் பெற்றுத் தருவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருப்பதாகவும்,தானே அதற்கு உறுதியளிப்பதாகவும் பேசிய அவரின் பேச்சு உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டியது.

இந்தியா சுதந்திரம் அடைகிற நேரத்தில் கண்ணியம் மிகுந்த காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் தான் எதிர்க்கட்சித் தலைவர். 29 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை ராஜதானியிலே முஸ்லிம் லீக் கட்சிக்கு மட்டும் இருந்தார்கள்.இது இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சிகளிலேயும் முஸ்லிம் சமூக சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இன்றைக்கு தமிழ்நாட்டில் மக்கள் தொகை அடிப்படையில் குறைந்தபட்சம் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் இஸ்லாமிய சமூகத்திற்கு இருக்க வேண்டும். ஆனால் சுதந்திரத்திற்கு பின்பு இருந்த பதினைந்து சட்டமன்றங்களில் ஒன்றில் கூட இந்த எண்ணிக்கை இல்லவே இல்லை. நாடாளுமன்றத்திலே தமிழ்நாட்டின் சார்பில் மூன்று உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதுவும் இல்லவேயில்லை.தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி இவை எவற்றிலேயும் இஸ்லாமியர்கள் குறைந்தபட்ச சதவீதத்தில் கூட இல்லை.இவை எல்லாவற்றையும் தமிழக முதல்வர் உணர்ந்திருக்கிறார் என்பது இந்த ஜமால் முகமது கல்லூரி உரையின் மூலமாக தெரிய வருகிறது. எனவே வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் இருந்து இஸ்லாமிய மக்களுக்கான அதிகார பகிர்வை சதவிகித அடிப்படையிலே தொடங்குவார் என உறுதியாக நம்புகிறேன்.திமுக கூட்டணியில் இருக்கிற இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் முதல்வரின் பேச்சைக் கேட்டு தங்களுக்கான இருக்கை எண்ணிக்கையை சட்டமன்றத்திலே அதிகரிப்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். ஒரு வேளை இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அதிக எண்ணிக்கையில் போட்டியிட விரும்பாவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிற இஸ்லாமியர்களுக்கு அவர்களின் சதவீத அடிப்படையில் தி.மு.க.வில் சீட்டுகள் ஒதுக்கப்படும் என நம்புகிறேன்.

இதற்கான முன் முயற்சியை இப்போதே அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார் 


Post a Comment

0 Comments