சென்னை அம்பத்தூரில் (விட்ஃபா) உலக சர்வதேச தமிழ் திரைப்பட அமைப்பின்) சார்பில் புத்தக வெளியிட்டு விழா மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களுக்கு மியூசிக்கல் டைமண்ட் என்கிற விருது வழங்கும் விழா நிகழ்வு நடைபெற்றது.
இந்த விழாவில் விட்ஃபா உலக சர்வதேச தமிழ் திரைப்பட அமைப்பின் நிறுவனர் தலைவரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏ. ஆர்.எம்.றஸீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல இசையமைப்பாளர் திரைப்பட இயக்குனர் பாடலாசிரியர் கங்கை அமரன் சுப்பர் ஹிட் திரைப்படங்களான சிவகாசி திருப்பாச்சி திருப்பதி திரைப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனர் பேரரசு அவர்களும் கலந்து கொண்டு விட்ஃபா (திரைப்படத்துறையில் புதிய பயணம்) என்கிற புத்தகத்தை வெளியிட்டு சிறப்பித்தனர் .
இவ்விழாவில் விட்ஃபா அமைப்பின் சார்பில் பிரபல இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான கங்கை அமரன் அவர்களுக்கு மியூசிக்கல் டைமண்ட் என்கிற விருது வழங்கப்பட்டது .
மேலும் விட்ஃபா அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்து செய்து வாழ்த்து பதாகை நினைவு பரிசாகவும் வழங்கப்பட்டது இவ்விழாவில் விட்ஃபா அமைப்பின் நிறுவனர் தலைவர் ஏ. ஆர்.எம்.றஸீம் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று அமைப்பின் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தனர்கள் விட்ஃபா அமைப்பின் சட்டம் மற்றும் தமிழ் திரைப்படதுறையில் எதிர்கால திட்டங்கள் குறித்த விட்ஃபா திரைத்துறையில் புதிய பயணம் என்கிற புத்தகத்தை வெளியிட்டு விட்ஃபா அமைப்பின் மூலமாக எந்த வித பின்புலமும் இல்லாமல் பல திறமைகளுடன் திரைப்படத்துறையில் சாதிக்க முயற்சி செய்து வரும் நபர்களுக்கு இந்த விட்ஃபா அமைப்பு மூலம் கிடைக்க போகும் வாய்ப்புகள் பாராட்டுக்குரியது என்றும் விட்ஃபா அமைப்பு எடுக்கும் அனைத்து முயற்ச்சி களுக்கும் தங்களது ஆதரவை தெரிவித்ததுடன் விட்ஃபா அமைப்பு தமிழ் திரைப்படத்துறையில் பல புதிய சாதனைகளை படைக்க தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் விட்ஃபா அமைப்பின் நிர்வாகிகள் துணைத்தலைவர்கள் ராமகிருஷ்ணன் சந்திரன் பொன்ராஜ் அனிட்டா ரோஸ்லின் மாரியப்பன் அனுஷியா நவரத்தினம் யாஸ் யாபேஸ் பொருளாளர் ஆனந்தராஜ் நிர்வாக அதிகாரி எம். ஆர்.ஹிஸ்புல் நிர்வாகிகள் வழக்கறிஞர் ரமேஷ் வழக்கறிஞர் வினோத் கண்ணன் வழக்கறிஞர் ராமச்சந்திரன் ரோஸினா பானு பிரின்ஸ் குமார் ஓவியர் ஜே கே சாய்பரஞ்ஜோதி பணங்குடி மணி உயர்பீட குழு மத்திய குழு செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
விட்ஃபா அமைப்பின் பொதுச்செயலாளராக திருச்சியை சேர்ந்த தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்ற நடிகர் மற்றும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவருமான ஆர்.ஏ.தாமஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments