திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் முன்னிலையில் திருச்சி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கே.கே.எம். என் முரளிஓபிஎஸ் அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
காங்கிரஸைச் சேர்ந்த உறையூர் பகுதி பட்டதாரி அணி மாநில பொதுச் செயலாளர் செந்தூர்வாசன், அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.மேலும் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள்பி.பெரியசாமி,கே.நாகராஜ்,ஆர்.ராஜா,சந்திரமோகன்,எல்.சாம்சன்
காங்கிரஸ் நிர்வாகிகள் :டி.சிவக்குமார், கே.சண்முகவேல்,பிரசன்னா, சுந்தர், பரத், தினேஷ்,ரூபன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி அதிமுக.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கதிரவன்,55 -வது வட்ட செயலாளர் கணேஷ், ஜங்ஷன் பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நாகநாதர் மகேஷ்,ஜங்ஷன் பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் சங்கர், ராஜமணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 Comments