// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** திருச்சி நத்தர்வலி தப்லே ஆலம் பாதுஷா தர்கா அறங்காவலர்களை சந்தித்து வாழ்த்திய மஜகவினர்....!

திருச்சி நத்தர்வலி தப்லே ஆலம் பாதுஷா தர்கா அறங்காவலர்களை சந்தித்து வாழ்த்திய மஜகவினர்....!

திருச்சியில் புகழ்பெற்ற நத்தர் வலி தப்லே ஆலம் பாதுஷா தர்கா அறங்காவலர்களாக தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலம் புதிய பொறுப்பாளர்கள் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர். 

புதிதாக பொறுப்பேற்ற அறங்காவலர்களை மஜக  மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் (எ) பாபு அவர்கள் தலைமையில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். 


முன்னதாக மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி ஷெரிப் அவர்கள் பேசியபோது நிர்வாகத்தினருக்கு மஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் அதேபோன்று தலைவர் தமிமுன் அன்சாரி அவர்களது தலைமையில்  மஜக முன்னெடுக்கும் சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்க அரசியல் முன்னெடுப்புகளுக்கு முழு ஒத்துழைப்பும் தர்கா நிர்வாகம் வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார்.


அதனை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட அறங்காவலர்கள் குழு திருச்சியில் மஜக வின் சிறப்பான வளர்ச்சிக்கு என்றும் துணை நிற்போம் என தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் ஷேக் தாவூத் மாவட்டத் துணைச் செயலாளர் ஷேக் அப்துல்லா, தர்வேஷ், யாசர் ஷெரிப் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பஷாரத், நியாஸ் உட்பட தர்கா நிர்வாகத்தினர் உடன் இருந்தனர்.


Post a Comment

0 Comments