திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழா கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.கல்லூரி முதல்வர் முனைவர் ஜார்ஜ் அமலரெத்தினம் தலைமை வகித்தார்.செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி டாக்டர் ஏ. கே. காஜா நஜிமுத்தீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது சாகிப், துணைச் செயலர் முனைவர் கே அப்துஸ் சமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையின் சார்பாக தமிழர் பாரம்பரிய புழங்கு பொருட்கள், பழங்கால மற்றும் சமகால நாணயங்கள் மற்றும் உலகப் பணத்தாள்கள், ஐந்திணைக் காட்சிகள், தமிழர் பாரம்பரிய உணவு தானியங்கள், வளரிள தாவரங்களின் மதிப்புக்கூட்டு தயாரிப்புகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டன. சீன டிராகன் நாணயம் குறித்து மு.முகமது சுஐப் பேசுகையில்,ஒரு கம்பீரமான சீன டிராகன் நாணயம் டிராகனின் ஆண்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இந்த நாணயம் ஒரு ஆடம்பரமான கண்ணாடி குவிமாடத்தில் வருகிறது, அதோடு நம்பகத்தன்மைக்கான சான்றிதழும் உள்ளது. உலகளவில் 500 துண்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டவை. இந்த நாணயத்தின் பின்புறம் ஒரு கம்பீரமான சீன டிராகனைக் காட்டுகிறது, இது நேர்த்தியான விவரங்களுடன் வடிவமைக்கப்பட்டு நாணயத்திலேயே அழகாக மூடப்பட்டிருக்கும். பின்புறத்தில், டிராகனின் ஆண்டு - நாணயத்தின் பெயர், மற்றும் 2024 - வெளியிடப்பட்ட ஆண்டு. நாணயத்தின் முன்பக்கத்தில் கேமரூனின் சின்னம் நாணய முக மதிப்பு 2000 பிராங்குகள் பொறிக்கப்பட்டுள்ளது. வெள்ளி - செம்பு உலோகத்தில் 40எடை கிராம் 40விட்டம் மிம 500 சிறப்பு நாணயங்கள் சான்றிதழுடன் விளக்கக்காட்சி பெட்டியுடன் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இந்த நிகழ்வில் கல்லூரி நிருவாகக் குழு பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது, துணை முதல்வர் முனைவர் ஜாகீர் உசேன், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஷே.நாகூர்கனி, தேர்வு நெறியாளர் முனைவர் அ.சையத் ஜாகீர் ஹசன், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்
முனைவர் க. சிராஜுதீன், பேரா. கா. முகமது இஸ்மாயில், முனைவர் ச. அ. சையத் அகமது பிரோசு, முனைவர் அ. மா. முகமது ஹாரிஸ்,முனைவர் மு.ஜஹானாரா, முனைவர் சு.விஜயலட்சுமி பேரா ரா. ரஜுலா,பேரா ச. செல்வி உள்ளிட்ட பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் பாண்டியன், முகமது ஜுபைர் ,சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், பாலிமர் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி, பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.


0 Comments