அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் மத்திய மற்றும் தென் மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது கூட்டத்திற்கு நிறுவனத் தலைவி ராஜேஸ்வரி பிரியா தலைமை தாங்கினார் மாநில நிர்வாகிகள் வெள்ளைசாமி முகமது காசிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் வீணா, மரிய விஜய் ஆனந்த், செல்வசேகர் ,விஜய கார்த்திகேயன், காசிநாத்துரை ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராஜேஷ் ஆனந்தராஜ் ஹென்றி ஜோசப், சினேகா, பார்த்திபன், ராஜபாண்டி, சதீஷ்குமார், கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவது என்றும்.சில தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு விட்டது கொலை கொள்ளை சம்பவங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது.திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை,விளம்பர அரசாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது,இந்த அரசுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்,சாமானிய மக்களும் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் நோக்கம் என்று கூறினார்.





0 Comments