திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்கம் சார்பில் சென்னை மாநிலத்தின் இது இருபது காசு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிதிருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணய சேகரிப்பாளர் முகமது சுபேர், மூத்த நாணயங்கள் சேகரிப்பாளர் அசோக் காந்தி, ஹீராலால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சென்னை மாகாண நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் இது இருபது காசு குறித்து பேசுகையில்,
சென்னை மாகாணம் (Madras Presidency) பிரித்தானிய இந்தியாவின் ஓரு நிருவாகப் பிரிவு. இது மெட்ராஸ் ராஜதானி, சென்னை ராஜதானி, மெட்ராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. இது தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் மலபார் பிரதேசம், இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை இம்மாகாணத்தில் அடங்கியிருந்தன. இதன் கோடைக்காலத் தலைநகரம் உதகமண்டலம், குளிர்காலத் தலைநகரம் சென்னை இருந்தது.இங்கு நாணய முறைப்பாடு காசு, பணம், வராகன் (பொன்)என்ற வகையில் இருந்தது. அதனையே கிழக்கு இந்திய நிறுவனத்தினரும் ஏற்று நாணயங்களை வெளியிட்டனர் தங்கத்தால் ஆன வராகன் நாணயங்கள் இந்து கோயில்களின் கோபுரத்தின் படம் பதித்து பகோடா நாணயங்கள் என்று அழைக்கப்பட்டது பகோடா வெளியீட்டு நாணயங்களில் தமிழிலும் தெலுங்கிலும் அரபியிலும் ஆங்கில மொழியிலும் வாசகங்கள் உண்டு 1/2 பூவராகன் என்ற வெள்ளி நாணயம் டாலர் நாணயத்தின் அளவில் 1 3/4 ரூபாய்க்கு சமனாக வெளியிட்டனர். செம்பு, வெள்ளி, தங்கம் உலோகத்தில் வெளிவந்த நாணயங்கள் அனைத்திலும் தமிழ், தெலுங்கு மொழி வாசகங்கள் உள்ளன. செப்புக்காசுகளில் 2 1/2 காசு என்ற சிறிய நாணயமும் 40 காசு என்ற பெரிய நாணயங்களில் யிது/இது இடுகுறிச்சொல்லும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. 20 காசு XX Cash நாணயத்தின் முன்புறத்தில் பாரசீக மொழியில் கீழே XX CASH வாசகமும் நாணயத்தின் பின்புறம் இது 20 காசு தமிழிலும் தெலுங்கிலும் பொறிக்கப்பட்டுள்ளது 1807 ஆண்டு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
செம்பு உலோகத்திலான நாணயம் 26.5 மில்லி மீட்டர் விட்டமும் 9.65 கிராம் எடையும் உள்ளது. தெலுங்கு பேசும் பகுதியில் பல காலமாக உபயோகத்தில் இருந்த டப்பு என்று சொல்லினை 20 காசுகளுக்கு இணையாக பெயரிட்டு புழங்கினார்கள்.அதேப்போல யிது அஞ்சு காசு 2.57 கிராம் எடையுள்ள செம்பு உலோகத்தில் 20.0 மில்லி மீட்டர் விட்டதில்லான நாணயத்தின் முன் பக்கத்தில் V CASH ஆங்கில வார்த்தையின் மேலே புள்ளியிலான கோடு இடம் பெற்றுள்ளது நாணயத்தின் பின்புறம் யிது அஞ்சு காசு தமிழிலும் தெலுங்கிலும் அச்சிடப்பட்டுள்ளது என்றார்.





0 Comments