முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் ரவிராஜா தலைமையில் மரக்கடை ராமகிருஷ்ண பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரையை மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி வருகிற நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேருவின் செயல்பாட்டை முடக்கும் வகையில் பொய் வழக்கு போட்டு துடிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், ஏவல் துறையாக செயல்படும் அமலாக்க துறையை கண்டித்தும், திருப்பரங்குன்றத்தில் இந்து முஸ்லிம் மத முதலை ஏற்படுத்த துடிக்கும் பாஜகவினரின் செயல்பாடு கண்டித்தும், மேலும், தீபத்துல் வழக்கில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி சுவாமிநாதன் கண்டித்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முகமதுஇக்பால், சாதிக்கான், ஹபிப் முகமது ஜாகீர்கான், உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.





0 Comments