// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சிக்கு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிற 11-ம் தேதி வருகை தரும் பிரதமர் - இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்.

திருச்சிக்கு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிற 11-ம் தேதி வருகை தரும் பிரதமர் - இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் அதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் பாஜகவின் மாநில பொது பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியை நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் ஆய்வு செய்தனர் .

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் :- முன்னதாக திருச்சி புதுக்கோட்டை , தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைகளில் அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். 

திருச்சியில் நடைபெறும் கூட்டம் தேர்தல் பரப்புரை கூட்டமாக அமையும் பிரதமர் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வருவார் என்றார்.

Post a Comment

0 Comments