// NEWS UPDATE *** த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்கடனை முழுமையாக ரத்து செய்யக்கோரி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் *** தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் த.வெ.க அரசு பொறுப்பேற்றுதற்கு பின்பு சுமார் 207 பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று உள்ளது. அதிலும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. ஆனால் தமிழக அரசு அந்த குற்றங்களை தடுக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், அதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் சட்டங்களை கடுமையாக்கி பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கூறியும் எஸ்.டி.பி.ஐ கட்சி மகளிர் அணி சார்பில் திருச்சி மரக்கடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாற்றம் மாற்றம் என கூறினார்கள் ஆனால் நடைபெற்றுள்ள மாற்றம் மிக மோசமான மாற்றமாக உள்ளது தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சிங்கப்பெண் படைக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.


மேலும் இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தெளலத் நிசா தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட துணைத்தலைவர் பஷீரா கனி ,SDPI கட்சி திருச்சி  தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி ஆகியோர்கள்   முன்னிலை வகித்தார்கள்.மாவட்ட துணைத்தலைவர் மூமினா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.மாவட்ட தலைவர் தெளலத் நிஷா அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.மாவட்ட பொதுச்செயலாளர் பாத்திமா  அவர்கள் தொகுப்புரை ஆற்றினார்.


இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மகளிர் அணி மாநில செயலாளர்  ஆலிமா.மெஹராஜ் பானு அவர்களும்,SDPI வர்த்தக அணி மாநில பொதுச்செயலாளர் கே.முபாரக் அலி ஆகியோர்கள் கலந்துக் கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழக அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கண்டன உரையாற்றினார்கள்.


மாவட்ட துணைத்தலைவர் மூமினா அவர்கள் கண்டன கோஷம் எழுப்பினார்கள்.இந்நிகழ்வில் மேற்கு தொகுதி தலைவர் முபீனா,திருவெறும்பூர் தொகுதி தலைவர் ரம்ஜான்,செயலாளர் பரக்கத் நிஷா,கிழக்கு தொகுதி தலைவர் சாஜாத்தி மற்றும் தொகுதி,கிளை நிர்வாகிகளும்,SDPI கட்சியின் மாவட்ட,தொகுதி,கிளை நிர்வாகிகளும் ,பொதுமக்களும் திரளாக கலந்துக்  கொண்டார்கள்.

இறுதியாக மாவட்ட ஐடி விங் தலைவர் S.A.செய்யது பீவி B.A.,B.Ed.,அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

Post a Comment

0 Comments