// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ஆளுநர் விருது பெற்ற உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்துவரும் சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு!

ஆளுநர் விருது பெற்ற உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்துவரும் சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு!

திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சார்பில் ஆளுநர் விருது பெற்ற சாதி, மத, இன வேறுபாடு இன்றி  உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்துவரும் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார், அவரது சமூகப்பணிக்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் சித்ரா தம்பதியினருக்கு பாராட்டு விழா திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க   கூட்ட அரங்கில் நடைபெற்றது. 

வழக்குரைஞர் இந்திரா காந்தி வரவேற்றார்.மூத்த பெண் வழக்குரைஞர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.‌ திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் சிறப்புரையாற்றினார்.சாதி,மத,இன வேறுபாடின்றி உரிமைக்கோரப்படாத ஆதரவற்றவர்கள் சடலங்களை  கண்ணியமான முறையில்   நல்லடக்கம் செய்து வரும் யோகா ஆசிரியர் விஜயகுமார்,மனைவி வழக்குரைஞர் சித்ரா, சட்டப்படிப்பு பயிலும் மகள் கீர்த்தனா உறுதுணையுடன் செய்து வருகிறார்.

யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்ற சமூகப் பணியினைப் பாராட்டி தமிழ்நாடு ஆளுநர்,‌2026 குடியரசு தினத்தன்று தனிநபர்‌ பிரிவில் சிறந்த சமூக சேவையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த தனிநபர் பிரிவில் முன் மாதிரியான சேவை,  அர்ப்பணிப்பு மற்றும் சமூக நலனில் கொண்ட தன்னலமற்றப் பணியைப் பாராட்டி மக்கள் மாளிகையில் ஆளுநர் விருதினை வழங்கினார்.  ஆளுநர் விருதாளர் தன்னலமற்ற பணியினை பாராட்டியும், அவரது பணிக்கு உறுதுணையாக இருந்த வழக்குரைஞர் சித்ரா பணியினைப் பாராட்டியும் திருச்சிராப்பள்ளி குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வெங்கடேசன், மோட்டார் வாகன விபத்து வழக்கு நீதிமன்ற மாவட்ட நீதிபதி கார்த்திகா, குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் அனு சுருதி, பரமவீர், முகமது சுகைல், திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கணேசன், செயலாளர் முத்துமாரி, குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் வெங்கடேஷ், சிட்டி சிவில் வழக்கறிஞர் சங்க தலைவர் சீனிவாசன், மூத்த வழக்கறிஞர்கள் ஜேசுபால் ராஜ், ஓம் பிரகாஷ், சௌந்தர்ராஜன், அலெக்ஸ், கங்கைச் செல்வன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வழக்குரைஞர் மெகராஜ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க, நிறைவாக வழக்குரைஞர் சுதா நன்றி கூறினார். பெண் வழக்கறிஞர்கள் விஜயபாபு, மெகராஜ், மலர்விழி,கவிதா,ராஜலட்சுமி, ஷானவாஸ், பத்மா, ஹாஜிரா, செந்தில் வடிவு, செந்தூர் பாண்டி, சுபாஷினி, நீமாவதி,வனிதா, எழிலரசி உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments