// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் இப்தார் விருந்து.. மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் 1000 பேருக்கு அனுமதி

தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் இப்தார் விருந்து.. மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் 1000 பேருக்கு அனுமதி

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் இன்று நடைபெற உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று மார்ச் 18ம் தேதி மாலை பிரம்மாண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன


மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் இன்று மாலை நோன்பு திறக்கும் நேரத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.இந்த இப்தார் விருந்தில் பங்கேற்க சுமார் 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமியப் பெரியவர்கள், உலமாக்கள் மற்றும் தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, இந்நிகழ்வு ஒரு மதச்சார்பற்ற அடையாளமாக இருக்க வேண்டும் என்பதால் இந்து, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரும் இதில் ஒன்றிணைந்து பங்கேற்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்று ஏற்கனவே தனது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்த விஜய், தற்போது நேரடியாக இப்தார் விருந்து அளிப்பதன் மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறார். இந்நிகழ்ச்சியில் விஜய் தனது கட்சியின் அடுத்தகட்ட தேர்தல் பணிகள் குறித்து ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.விஜய் பங்கேற்பதால், மாமல்லபுரம் மற்றும் பூஞ்சேரி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தனியார் பாதுகாப்புப் படையினரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

Post a Comment

0 Comments