// NEWS UPDATE *** வேட்புமனு தாக்கல் செய்தார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ///////////////////////////////\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ வேட்புமனு தாக்கல் செய்தார் தவெக தலைவர் விஜய்! *** மதக் கலவரங்களை ஒடுக்குகின்ற ஒரு ஆட்சியாக, அரசாக, கட்சியாகவும் திமுக உள்ளது - கிறிஸ்தவ நல அமைப்பு மாநிலத் தலைவர் பேட்டி.

மதக் கலவரங்களை ஒடுக்குகின்ற ஒரு ஆட்சியாக, அரசாக, கட்சியாகவும் திமுக உள்ளது - கிறிஸ்தவ நல அமைப்பு மாநிலத் தலைவர் பேட்டி.

கிறிஸ்தவ நலம் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வழக்கறிஞர் பெர்னாண்டஸ் ரத்னராஜா தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் AICC அமைப்பின் பேராயர் மோகன்தாஸ், செயலாளர் சாம் ஜெபதுரை, சுயாதீன திருச்சபைகளின் டேனியல் வின்சென்ட் கன்னியாகுமாரி துணைச் செயலாளர் பைஜி ,தமிழக ஆயர் பேரவையின் மாநில செயலாளர் அருட்தந்தை பெனடிக் மற்றும் திருச்சி ,தஞ்சை, ஈரோடு, சேலம், கோவை சேர்ந்த பேராயர்கள் உட்பட திரளாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.அப்போது ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் தான் படித்தேன் உங்களின் கடுமையான உழைப்பு இங்கு வந்து நான் நிற்பதற்கு காரணம்.எந்த விதத்தில் எங்களுக்கு பாகுபாடு கிடையாது எங்கள் செயல்களிலும் எண்ணங்களிலும் உள்ளது.


எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சொன்னீர்கள். நீங்கள் என்றோ வந்து விட்டீர்கள்.அதில் நாங்கள் இருக்கிறோம் எந்த மாற்றமும் கிடையாது.நாங்கள் மதத்தின் பெயரிலும், இன்னொரு பெயரிலும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.நீங்கள் சொன்ன கருத்துக்களை தலைவரிடம் எடுத்துச் செல்வேன்.பாராளுமன்றத்தில் பைனான்ஸ் மினிஸ்ட்ரி பற்றியும், ஜெய்சங்கர் பற்றியும் சொல்லுவேன் அவர்கள் இருவருக்கும் செயின்ட்ஜோசப் கல்லூரி பெரிய பங்கு உண்டு.அவர்கள் சொல்ல மாட்டார்கள். ஆனால் நான் பெருமையாக சொல்கிறேன்.உங்களுக்கு எதிராக உள்ளவர்களுக்கும் நீங்கள் கடின உழைப்பை செய்து இருக்கிறீர்கள். எந்த பாகுபாடு இல்லாமல் செய்வது பெரும் எடுத்துக்காட்டு.



98 சதவீதம் படிப்பறிவு உள்ள கேரளா மாநிலத்தில் மதம் சார்ந்த பிரச்சினைகள் வர ஆரம்பித்துவிட்டது.இங்கு கிடையாது. அதற்கு ஒரு அறன் உள்ளது. இந்த அரணை வீண் போக விடக்கூடாது. தமிழ் வழியில் அது முக்கியமான பங்கு.சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருப்போம் என பேசினார்.தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கிறிஸ்தவ நல அமைப்பின் மாநில தலைவர் வழக்கறிஞர் பெர்னாண்டஸ் ரத்னராஜா கூறுகையில்...எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு அறிந்து அனைத்து மக்களுக்கும் நல்லாட்சி செய்து கொண்டிருக்கின்றதிராவிட மடல் ஆட்சியின் நாயகர் ஸ்டாலின் அவரின் தலைமையிலான கூட்டணிக்கு கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவிப்பது என்றும் 234 தொகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் களப்பணி ஆற்றுவார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிறிஸ்தவரான ஜோசப் விஜய் இருக்கிறார் என்ற கேள்விக்கு .....

கிறிஸ்தவம் என்பது 200, 300 ஆண்டுகளாக இருந்து வருகிறது நிறுவனங்கள் மிகவும் துடிப்பாக செயல்பட்டு வருகிறது.கிறிஸ்தவ நிறுவனங்களில் படித்தவர்கள் எல்லா கட்சிகளிலும் பொறுப்பு மிகுந்த பதவிகளில் இருந்து வருகின்றனர்.கிறிஸ்துவ மக்களுக்கு பேசுபவர்களாக, எல்லாரையும் அரவணைத்து செல்பவர்களாக எல்லாருக்கும் பேசுபவர்களை தான் நாங்கள் ஆதரிக்க முடியும். 

நேற்று வரை அவர் தன்னுடைய தொழிலில் பிஸியாக இருந்துவிட்டு இன்று கிறிஸ்தவர் என்ற அடையாளத்தோடு வருகிறது என்று சொன்னால் அதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

பெண்களாக இருந்தாலும் மாணவர்களாக இருந்தாலும் பல்வேறு நலத் திட்டங்களை அடிப்படையில், மதக் கலவங்களை ஒடுக்குகின்ற ஒரு ஆட்சியாக, அரசாக, ஆட்சியாக, கட்சியாகவும் திமுக உள்ளது. எனவே, எங்களது ஆதரவு என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments