திருச்சி மாநகரம் தனியார் திரையரங்கு அருகில் 72 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உயிர்காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்தவர் தனது பெயர் லட்சுமணன் எனவும் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்ததாகவும் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் வாழ்ந்து வந்ததாகவும் வயது முதிர்வு காரணமாக அருகில் வசிப்பவர்கள் கொடுக்கும் உணவை கொண்டு ஜீவனம் நடத்தி வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேற்படி நபர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளார். திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவலர்கள் இறந்த நபர் குறித்து விசாரிக்கையில் இறந்த நபர் பெயர் லட்சுமணன் என்பதும் உறவினர்கள் என்ற முறையில் யாரும் இல்லை என்பதும் தெரிய வந்தது. மேற்படி நபர் உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவலர் நெல்சன் பவுன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி குழுமிக்கரை மயானத்தில் காவலர் நெல்சன் பவுன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.

0 Comments