// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். 

வேட்பாளர் இனிகோ கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட  காந்தி மார்க்கெட் பகுதி மற்றும் செளராஷ்டிரா தெரு, பாபு ரோடு , ஜின்னா தெரு ஆகிய பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 




இந்த பிரச்சாரத்தின் போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments