// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** ஆளுநர் விருதாளரைப் பாராட்டிய பெண் எழுத்தாளர்!

ஆளுநர் விருதாளரைப் பாராட்டிய பெண் எழுத்தாளர்!

உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்றப் பணியினை பாராட்டி  2023ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநர் விருது வழங்கினார். ஆளுநர் விருது பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்  மனிதநேயப் பணியை

திருச்சிராப்பள்ளி மாவட்ட பெண் எழுத்தாளர் தனலட்சுமி பாஸ்கரன், மேனாள் மாவட்ட நீதிபதி குகன் @ கே. கருணாநிதி, தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் மாநில தலைவர் கதிரவன் முன்னிலையில் பாராட்டினார். 

மேலும் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் கலைகளை பரப்பவும், பாதுகாக்கவும் சமூக மேம்பாட்டிற்காக அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம், பாரம்பரியத்தைக் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம், 26 முறை குருதி கொடை, மூன்று ஜோடி கண் தானத்தை பெற்றுக் கொடுத்த பணி, வாழ் நாளிற்குப் பிறகு படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம் என திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் மருத்துவ கல்லூரியில் உடல் தானத்திற்கு பதிவு செய்தமையையும், உடல்நலம், கவிதை, கட்டுரை நூல்கள் வெளியிட்டமையையும் பாராட்டினார்.

Post a Comment

0 Comments