திருச்சி MIET பொறியியல் கல்லூரி 28 வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.கல்லூரி மாணவர்கள் இசைக்குழு இசைக்க, நீலம், பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நான்கு அணிகளின் அணிவகுப்புடன் விளையாட்டு விழா இனிதே தொடங்கியது,
MIET கல்வி நிறுவனங்களின் தலைவர் Er.ஏ.முகமது யூனுஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரி துணைத் தலைவர் டாக்டர் எம். ஒய். அப்துல் ஜலீல் கல்லூரிக் கொடியை ஏற்றிவைத்து விழாவினை சிறப்பித்தார்கள்.கல்லூரி முதல்வர் அ. நவீன்சேட் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக இந்திய தடகள வீரரும் ஆசிய பதக்கம் வென்றவருமான திரு. மணிகண்ட ஆறுமுகம் அவர்கள் ஒலிம்பிக் கொடியை ஏற்றிவைத்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அவர் தனது உரையில் மாணவர்களை விளையாட்டில் பங்கேற்க தூண்டியதுடன், இன்றைய நாளில் விளையாட்டு துறையில் வெற்றி பெறுகின்ற வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
மேலும் வெளிநாடுகளுக்குச் சென்று விளையாட்டில் சாதனை படைத்து நமது தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பு ஒரு விளையாட்டு வீரனுக்கு உரித்தானது.
இதை மாணவர்களாகிய நீங்கள் பயன்படுத்திக் கொண்டு விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்
இதைத்தொடர்ந்து நடந்த விளையாட்டுப் போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் சிவப்பு நிற அணியினர் கல்லூரியின் கோப்பையை வென்றனர். விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள், பரிசுகளை வழங்கினார்.
கல்லூரியின் இயந்திரவியல் துறை இணை பேராசிரியர் எம். தண்டாயுதபாணி நன்றியுரை ஆற்றினார். மற்றும் உடற்கல்வி இயக்குனர் எஸ்.காந்திமதி விளையாட்டு ஏற்பாடுகளை செய்திருந்தார்

0 Comments