// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா - சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பங்கேற்பு!

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா - சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பங்கேற்பு!

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரியின் சார்பில் இளம் மௌலவிகளுக்கான பட்டமளிப்பு விழா, திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி நிறுவனர் மௌலவி அல்உஸ்தாத் R. முஹம்மது ஃபைஜுல் பாரி ஃபைஜீ பிலாலி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, கல்லூரி தலைவர் அல்ஹாஜ் V. ராஜ் முஹம்மது ஃபைஜீ முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்து சிறப்புரையாற்றினார். மேலும் SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். 


இவ்விழாவில் நாகை ஃபைஜுல் ஹஸனாத் அரபிக் கல்லூரி தலைவர் ஷைகுனா இர்ஃபானுல்லாஹ் ஷாஹ் ஃபைஜீ, திண்டுக்கல் யூசுஃபிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் அல்லாமா முஹம்மது அலி அன்வாரி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் வர்க்கலா ஜாமியா மன்னானியா இஸ்லாமிய பல்கலைக்கழக முதல்வர் அல்லாமா செய்யது முஸ்தஃபா ஃபாஜில் ரஷாதி ஆகியோர் கலந்து கொண்டு இளம் மௌலவிகளுக்கு ஆலிம் பட்டம் மற்றும் சனது வழங்கினர்.


மேலும் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், சமுதாயப் புரவலர்கள், மார்க்க அறிஞர்கள், பல்வேறு சமூக மற்றும் அரசியல் பிரமுகர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ராஜியா அரபிக் கல்லூரியில் மார்க்கக் கல்வியுடன் நவீன கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு AI & Machine Learning, சர்வதேச தரத்திலான அரபி மொழிப் பயிற்சி, அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுவதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மார்க்க அறிவுடன் நவீன தொழில்நுட்ப அறிவு, தலைமைத்துவ திறன் மற்றும் நாட்டுப்பற்றுடன் கூடிய மாணவர்களை உருவாக்கும் நோக்கில் கல்லூரி செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments