NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** 103.50 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான புதிய அடுக்குமாடி குடியிருப்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு

103.50 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான புதிய அடுக்குமாடி குடியிருப்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு

 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 103.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை,  திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு  இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




 திருச்சியில் 3.3 ஏக்கர் பரப்பளவில் 474 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது, 8 சதவீத வீட்டு வாடகைப்படியின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். முன்னுரிமை அடிப்படையில் ஏற்கனவே குடியிருந்தவர்கள் மற்றும் தற்போது குடியிருப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும். கார் பார்க்கிங் வசதியுடன் மாதம் ஆயிரம் ரூபாய் பராமரிப்பு செலவுக்காக அவர்களிடம் வசூலிக்கப்படும். தற்போதைய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் டிசம்பர் மாதத்துடன் நிறைவுபெறும் என்றும், அதன் பின்னர் காஜாமலை காலனி குடியிருப்புகள் அகற்றப்பட்டு கட்டுமானப் பணி தொடங்கும் என்றார்.


தோராயமாக தமிழகத்தைச் சேர்ந்த 4800 பேர் உக்ரைனில் சிக்கியுள்ளனர், திருச்சியை சேர்ந்த 4 பேர் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர், அவர்களின் விபரம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது, அவர்களை பத்திரமாக மீட்டுவர நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பெற்றோரிடம் அவர்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். அரிஸ்டோ மேம்பால கட்டுமானப் பணிக்கு மார்ச் இறுதிக்குள் அதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு விடும், அதற்கான கட்டுமான பணிக்கான டெண்டர் முடிவுற்றது என்றார்.


Post a Comment

0 Comments