NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** வேலை வாய்ப்பில் மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீத உள் இடஒதுக்கீடு வேண்டும்..! தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் தமிழ்நாடு முடி திருத்தும் நல சங்கம் கோரிக்கை???

வேலை வாய்ப்பில் மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீத உள் இடஒதுக்கீடு வேண்டும்..! தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் தமிழ்நாடு முடி திருத்தும் நல சங்கம் கோரிக்கை???

வேலைவாய்ப்பில் மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிட கோரி சங்கக் கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க ஸ்ரீரங்கம் மாநகரம் சார்பில் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் மற்றும் உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, பதவி ஏற்பு, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சி நடைபெற்றது.





வடக்கு மாவட்ட தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார்.வடக்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி,தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் ராஜலிங்கம், பொருளாளர் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழக அரசு வேலைவாய்ப்பில் மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாசிற்கு தபால்தலை வெளியிட வேண்டும்.நலவாரிய ஓய்வூதியத்தை ரூ ஆயிரத்தில் இருந்து ரூ 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்,ஆர், ஐ.எம்.பி, செவிலியர் படிப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக இளைஞரணி செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். முடிவில் ஆலோசகர் சுரேஷ் நன்றி கூறினார்.


Post a Comment

0 Comments