NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** வேலூர் பள்ளிவாசலை அபகரிக்க துடிக்கும் இந்து முன்னணிக்கு "யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்" கடும் கண்டனம்

வேலூர் பள்ளிவாசலை அபகரிக்க துடிக்கும் இந்து முன்னணிக்கு "யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்" கடும் கண்டனம்


வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை சர்க்கார் மண்டித் தெருவில் நீண்ட நெடிய காலமாக சுமார் 100 ஆண்டுகளாக இயங்கி வந்த "நவாப் ஹபீபுல்லாஹ் கான் மசூதி" என்னும் பள்ளிவாசல் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில், அதைப் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.



மார்க்கெட் சந்தை பகுதியில் அந்த பள்ளிவாசல் அமைந்துள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களும், வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் அங்கு தொழுதுவருகின்றனர்


அந்தப் பள்ளிவாசல் மீது வேண்டுமென்றே குறி வைத்து காத்திருந்த அப்பகுதி ஆர்.எஸ்.எஸ் கயவர்கள் புதுப்பிக்கும் பணி தொடங்கியதும் அதையே தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அமைதி பூங்காவான தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இதற்காக வேலூர் மண்டல இந்து முன்னணி தலைவர் மகேஷ் என்பவர் தலைமையில் சுமார் 50 பேர், சங்கிகளின் வழமையான பொய்,மிரட்டல் பித்தலாட்டத்தை பயன்படுத்தி அவதூறு பிரச்சாரம் செய்துள்ளனர்.


முஸ்லிம்கள் குடியிருப்பு வீட்டை இரவோடு இரவாக பள்ளிவாசலாக மாற்றிவிட்டார்கள் என்றும் அதை அகற்ற வேண்டும் என்றும் வதந்தியை கிளப்பி அமைதியாக இருக்கும் இரண்டு  சமூகங்களின் உறவுகளுக்கிடையில் மோதலை உருவாக்க முயற்சித்துள்ளனர்.

இந்து முன்னணியின் இந்த மதவெறியின் கேவலமானச் செயலை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.


இதை அறிந்தவுடன் நூற்றுக்கணக்கான வேலூர்  பகுதி இஸ்லாமியர்கள் சர்க்கார் மண்டித் தெருவில் கூடி பள்ளிவாசல் மீது கை வைக்க இருந்த பாசிச பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடித்துள்ளனர்.


பதற்றத்தை தவிர்க்க தமிழக காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்

அங்குள்ள நவாப் ஹபீபுல்லாஹ் கான் மசூதி நீண்ட காலமாக பள்ளிவாசலாக இயங்கி வந்ததற்கான ஆதாரங்களை நேற்று இரவு வரை ஆர்.டி.ஓ. முன்னிலையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகள் வசம் பள்ளிவாசல் நிர்வாகிகள் எடுத்துரைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.


மேலும் இந்த மத கலவரத்தை தூண்ட துடிக்கும் இந்துமுன்னனியின் மகேஷை தமிழக அரசு கைது செய்து பள்ளிவாசல் தொடர்ந்து இயங்க வழிவகை செய்யுமாறும் மற்றும் தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த எப்படியாவது மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகளுக்கு மதவெறி நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழக முதல்வரை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கேட்டு கொண்டுள்ளனர் 


Post a Comment

0 Comments