NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** சாலையில் விளையாடிய சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

சாலையில் விளையாடிய சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

 

6 வயது சிறுமியிடம் அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட 68 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

வடசென்னை - வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சர்தார் செரிப். 68 வயதான இவர், சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனியாக அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறவே, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் புகாரை தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றவே புகாரை விசாரித்த அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சர்தார் செரிப்பை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில்  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்படவே சர்தார் செரிப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்


Post a Comment

0 Comments