போலியோ சொட்டு மருந்து முகாமை யார் முன்னின்று நடத்துவதில் இரு திமுக கவுன்சிலர்களிடையே பிரச்சனை.
திருச்சி மாநகர 55-வது வார்டில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.இந்த வார்டின் கவுன்சிலராக புஷ்பராஜ் உள்ளார்.இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.அப்போது 54-வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் நிகழ்ச்சியில் முன்னின்று கலந்து கொண்டார்.மேலும் செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கும் போது மாவட்ட ஆட்சியாளருக்கு அருகிலேயே நின்றிருந்தார்.
இதை பார்த்து கடுப்பான 55-வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் மாவட்ட ஆட்சியர் சிவராசு அங்கிருந்து கிளம்பும் வரை காத்திருந்து அவர் சென்ற பிறகு "எங்க ஏரியாவுக்கு நீ ஏன் வர" என்று கேட்க இரு கவுன்சிலர் ஆதரவாளர்களிடையே பிரச்சினை ஏற்ப்பட்டது.
பின்னர் வாக்குவாதமாக மாறியது.உடனே கண்டோன்மெண்ட் காவல் துறையினர் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதை பார்த்த பொதுமக்கள் இன்னும் பொறுப்பேற்க்கவே இல்லை அதுக்குள்ள சண்டை போட ஆரம்பித்துவிட்டனர் என தலையில் அடித்துக்கொண்டே சென்றனர்.
0 Comments