தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் உட்பட் 10 மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் பெரும்பாலும் மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வரத்தாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சின்ன வெங்காயம் கிலோ 160 ரூபாய் வரை விற்பனையானது.
அடுத்து வந்த முகூர்த்த சீசனிலும் இதே விலை நீடிக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், திருச்சி மார்க்கெட்டுக்கு, தினமும் 300 டன் வரை வரத்து அதிகமாகி இருப்பதால், மூட்டை 750 முதல் 1250 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது படிப்படியாக விலை குறைந்து 100 ரூபாய்க்கு 4 கிலோ என்ற அளவுக்கு கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வரியினங்கள் அதிகரிப்பால்,ஏற்றுமதியிலும் சிக்கல் ஏற்பட்டு, வெங்காயம் தேக்கமடைந்துள்ளது. இதனால், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments