// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** திருச்சியில் ஸ்வீட் கடையில் பயங்கர தீ விபத்து

திருச்சியில் ஸ்வீட் கடையில் பயங்கர தீ விபத்து

 திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள ஸ்வீட் கடையில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின


திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் இவர் திருவெறும்பூர் பகுதியில் ஸ்வீட் கடைகளை நடத்தி வருகிறார். அவருடைய மற்றொரு கடையானது  திருவெறும்பூர் ஜெய் நகர் பகுதியில் உள்ளது அங்கு இருந்த ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் கடையில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். கடையில் தீ பற்றி எரிய தொடங்கியது இது குறித்து உடனடியாக நவல்பட்டு, பெல் மற்றும் திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


 அதன் அடிப்படையில் மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன்  அருகில் உள்ள மற்ற கடைகள் மற்றும் வீடுகள் பகுதிக்கு பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.


 இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments