NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** முன்னறிவிப்பின்றி திருச்சியில் ரயில்வே கேட் மூடியதால் பொதுமக்கள் அவதி

முன்னறிவிப்பின்றி திருச்சியில் ரயில்வே கேட் மூடியதால் பொதுமக்கள் அவதி

திருச்சியில்  முன்னறிவிப்பின்றி ரயில்வே கேட்டை மூடியதால் பொதுமக்கள் அவதி

திருச்சி  பொன்மலை அருகே மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் அருகே ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் விவேகானந்தர் நகர், வெங்கடேஸ்வரா நகர், ராஜீவ் காந்தி நகர், மிலிட்டரி காலனி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கடந்து செல்வது வழக்கம் இந்நிலையில் இந்த ரயில்வே கேட்டை இன்று காலை திடிரென  மூடியதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதி அடைந்தனர். 




மூடப்பட்ட ரயில்வே கேட்டில் 21 மற்றும் 22ம் தேதி நாளை 2 நாளைக்கு  காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை   ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில்வே கேட் மூடப்படுகிறது என ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.




இதனை முன்கூட்டியே அறிவிக்காமல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் அன்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். வாகன ஓட்டிகள் அனைவரும் வேறு பாதையில் திரும்பி சென்றனர்.

Post a Comment

0 Comments