NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மார்ச் 10 ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் "மக்களாட்சியை பாதுகாப்போம்" ஒற்றுமை அணிவகுப்பு பேரணி

மார்ச் 10 ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் "மக்களாட்சியை பாதுகாப்போம்" ஒற்றுமை அணிவகுப்பு பேரணி

 மார்ச் 10 ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் "மக்களாட்சியை பாதுகாப்போம்" ஒற்றுமை அணிவகுப்பு  பேரணி




பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக வருகின்ற மார்ச் 10 தேதி மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தலைப்பில்  ஒற்றுமை அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட பேரணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் 

மாநில துணை தலைவர் காலித் முகம்மது, SDPI கட்சி மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் சரிப் , NWF தேசிய செயலாளர் ஷிஃபா பானு , ஆல் இந்தியா இமாம் கவுன்சில் திருச்சி மண்டல தலைவர் அப்துல் கபூர் மன்பயீ ஆகியோர் பங்கேற்று பொது கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்கள். இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு  நடைபெற்றது இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட்  திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா  கலந்து கொண்டு பேட்டியளித்தார். இந் நிகழ்ச்சியில் திருச்சி மண்டல செயலாளர் ரஷீத் அஹமது, மாவட்ட தலைவர் அபூபக்கர் சித்தீக், மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி  புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் சலாவுதீன், திருச்சி மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்..

Post a Comment

0 Comments