// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** கால் கொலுசில் தங்கம் கடத்தல்...! திருச்சி விமானநிலையத்தில் பறிமுதல்

கால் கொலுசில் தங்கம் கடத்தல்...! திருச்சி விமானநிலையத்தில் பறிமுதல்

 திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் துபாயில் இருந்து வந்த பெண் பயணியின் ஒரு ஜோடி கால் கொழுசை பறிமுதல் செய்தனர். 






அந்த கொழுசை சோதனை செய்தபோது வெள்ளி நிறத்தில் முலாம் பூசப்பட்ட தங்க கொலுசு என்பது தெரியவந்தது. 328 கிராம் எடையுள்ள அந்த கொழுசை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சோதனை செய்ததில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 321 ஒரு கிராம் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பெண் பயணியிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments