// NEWS UPDATE *** 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு வரும் 15ம் தேதிக்குள் விருப்பமனுக்களை தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல் *** என்னை நீக்கியது செல்லாது ஓ.ராஜா பேட்டி

என்னை நீக்கியது செல்லாது ஓ.ராஜா பேட்டி


அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பெரியகுளத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-



அ.தி.மு.க.வுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று தான் அவரை நேரில் சந்தித்தேன். தற்போதைய இரட்டை தலைமையின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அனைவருக்கும் தெரியும். அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.


தற்போது அ.தி.மு.க.வில் கோஷ்டிகளாக உள்ளனர். ஒரு கட்டுப்பாடும் கிடையாது. எதிரெதிராக பேட்டி மட்டுமே கொடுக்கின்றனர். கட்சியில் இருந்து நிர்வாகிகளை தொடர்ந்து நீக்கம் செய்வது நல்லதல்ல. எனக்கு பொதுச்செயலாளர் சசிகலாதான். என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments